பூவிருந்தவல்லியை அடுத்த தண்டலத்திலுள்ள சவீதா பல்கலைக்கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற இந்த மரம் நடும் விழாவில் சவீதா பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமை தாங்கினார்.
இதில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் இரண்டாயிரத்து 250 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் உள்ளூர் பழ வகையான மா, பலா, சீதா, பாதம், சப்போட்டா என 600 பழவகை மரங்களும் 300 பூ பூக்கும் மரங்கள், மலைவேம்பு உள்ளிட்ட மருத்துவம் நிறைந்த மரங்கள் என இரண்டாயிரத்து 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.