தமிழ்நாடு

tamil nadu

ரூ.28 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கிய தொண்டு நிறுவனம்

By

Published : Apr 16, 2020, 6:21 PM IST

Updated : Apr 16, 2020, 7:00 PM IST

திருவள்ளூர்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினருக்கு தற்காப்பு உடைகள், சுவாசக் கருவிகள், வென்டிலேட்டர் உள்ளிட்ட ரூ. 28 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

Tiruvallur charitable Trust donated medical kit
medical kit for Tiruvallur government hospital

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கசுவாவில் அமைந்த சேவாலயா தொண்டு நிறுவனம் மற்றும் பி.என்.ஒய் மிலான் நிறுவனம் இணைந்து மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கான 200 தற்காப்பு உடைகள் மற்றும் சுவாசக் கருவிகள் உள்ளிட்ட 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சனிடம் 100 தற்காப்பு ஆடைகளும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கும் உடைகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.

ரூ.28 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கிய தொண்டு நிறுவனம்

மருத்துவ உபகரணங்களை திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் பிரபாகர், ஆட்சியர் மகேஸ்வரி வசம் பி.என்.ஒய் மிலான், சி.எஸ்.ஆர் தலைவர் வித்யா துரை, அதன் மேலாளர் பாலாஜி, சேவாலயா துணைத்தலைவர் கிங்ஸ்டன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

ரூ. 28 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உரிய நேரத்தில் மக்களுக்கு பயன்படும் விதமாக வழங்கிய சேவாலயா தொண்டு நிறுவனத்தாரை மாவட்ட ஆட்சியரும் சுகாதாரத்துறை அலுவலர்களும் பாராட்டினர்.

இதையும் படிங்க:வென்டிலேட்டா்கள் தயாரிப்புப் பணி தீவிரம்!

Last Updated : Apr 16, 2020, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details