தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியிட மாறுதலை உரிமையாக அணுக முடியாது - உயர் நீதிமன்றம் தடாலடி! - Pallipattu

பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகை தான் எனவும், பணியிட மாறுதலை உரிமையாக அணுக முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணியிட மாறுதலை உரிமையாக அணுக முடியாது - உயர் நீதிமன்றம் தடாலடி!
பணியிட மாறுதலை உரிமையாக அணுக முடியாது - உயர் நீதிமன்றம் தடாலடி!

By

Published : May 28, 2022, 10:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கேசவ ராஜபுரம் அரசு பள்ளியில் ஜமுனாராணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்திருந்தார். அதில், “நான் திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாகும் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு இடமாற்றம் பெற விரும்புகிறேன்.

இதற்காக மே 31 ஆம் தேதிக்கு முன்னால், சிறப்பு கலந்தாய்வுக்கு என்னை அழைக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (மே 28) உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் எதுவும் காலியாக இல்லை. எனவே, மனுதாரரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, “தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.

நிர்வாக வசதிக்காகத்தான் கலந்தாய்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை யாரும் உரிமை கோர முடியாது. மேலும், அரசின் முடிவில் தலையிட முடியாது” எனக் கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?

ABOUT THE AUTHOR

...view details