தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து 4 பேரிடம் செல்போன் பறிப்பு! - பொது மக்களிடம் சிக்கிய செல்போன் திருடர்கள்

திருவள்ளூர்: புழலில் அடுத்தடுத்து நான்கு பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் புழலில் அடுத்தடுத்த 4பேரிடம் செல்போன் பறிப்பு
திருவள்ளூர் மாவட்டம் புழலில் அடுத்தடுத்த 4பேரிடம் செல்போன் பறிப்பு

By

Published : Sep 12, 2020, 4:46 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழலில் இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு பேரிடம் அடுத்தடுத்து அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

இதில் இருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவரிடமும் புழல் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த தீனதயாளன், இம்ரான் என தெரியவந்தது.

இவர்கள் வேறு எங்கெல்லாம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து புழல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தென்காசியில் பைக் திருட்டு: அடையாளம் தெரியாத நபருக்கு வலைவீச்சு...!

ABOUT THE AUTHOR

...view details