தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாவது முறையாக ஒரே கடையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம் - cell phone theft

திருவள்ளூர்:  ஆதம்பாக்கத்தில் செல்போன் கடையின் பின்பக்கத்தை துளையிட்டு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன்களை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

கொள்ளைச் சம்பவம்

By

Published : Sep 26, 2019, 8:13 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பீட்டர் ராஜ் என்பவர் செல்போன் கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் இவர் கடையை பூட்டிவிட்டுச் சென்றிருந்த நிலையில் இன்று மாலை கடையை திறந்தபோது, கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கடையினுள்ளே சென்று பார்த்தபோது பின்பக்கச் சுவற்றில் பெரிய துளை ஒன்று போடப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையிலிருந்த விலையுயர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செல்போன்கள் திருடப்பட்டிருந்தது குறித்து ஆரம்பாக்கம் காவல் துறையினருக்கு பீட்டர் ராஜ் தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், சுவரை துளையிட்டு கைவரிசை காட்டிய அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த செல்போன் கடையில் மூன்றாவது முறையாக கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிந்தாதிரிப்பேட்டை ரவுடி கொலை - ஐவர் நீதிமன்றத்தில் சரண்!

ABOUT THE AUTHOR

...view details