திருவள்ளூரையடுத்த ஈக்காடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (46). இவர் அப்பகுதியிலுள்ள செங்குன்றம் சாலையில் பழைய பொருட்களைச் சேமித்து வைக்கும் காயலான் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அந்த குடோனுக்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மினி வேன்களும் தீயில் எரிந்து கருகின. இதைக்கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அதிக அளவிலான தீ எரிந்ததால் அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.