திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு அரங்கம் பகுதியில் வசிக்கும் சபாபதி, வினோத், சாலமோன், ரூபாவதி, வெங்கடேசன் ஆகியோரது ஐந்து கறவை மாடுகளும், மாரி என்பவரது ஒரு காளைமாடு உள்பட ஆறு மாடுகள் இன்று (ஜூலை 2) காலை மேய்ச்சலுக்காக சென்றது.
அப்போது கிராமத்தின் அருகே உள்ள தைலம் தோப்புக்குள் தரையை ஒட்டி தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் கால்நடைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து பலமுறை மின்வாரியத்திடம் முறையிட்டும், முறையான நடவடிக்கையின்றி மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதே இந்த விபரீதத்திற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வயல்வெளி, தெருக்கள், சாலையோரம் என அனைத்துப் பகுதிகளிலும் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை முறைப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்காமல் செயல்படும் மின்வாரிய ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்: மின்கம்பியில் சிக்கி கால்நடைகள் உயிரிழப்பு - மின்சார வாரியம்
திருவள்ளூர்: மேய்ச்சலுக்காக சென்ற ஆறு கால்நடைகள் மின்கம்பியில் சிக்கி பலியாகின.
பலியான கால்நடைகள்
இதையும் படிங்க:நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த 13 குரங்குகள்!