தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

திருவள்ளூர்: கிணறு தோண்டும் பிரச்னையில் பெண்ணைத் தாக்கி தகாத வார்த்தையில் திட்டிய திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர்
பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர்

By

Published : Oct 29, 2020, 8:20 PM IST

தனது வீட்டின் அருகே கிணறு தோண்டும் பிரச்னையில் பெண்ணைத் தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் ஒண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதனின் மகன் தாமோதரன் (55). இவர் தனது வீட்டின் அருகில் ஆழ்துளைக் கிணறு அமைக்க பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது திமுக ஒன்றிய கவுன்சிலர் திராவிட பக்தன், அவரது பேரன் ஞானசேகர் ஆகியோர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இடத்தை தங்களது இடம் எனக் கூறி ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாமோதரனின் மனைவி ஜெயலட்சுமியை ஞானசேகர் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். தொடர்ந்து ஞானசேகரன் திரும்பிச் சென்று மேலும் 5 நபர்களை அழைத்து வந்து ஜெயலட்சுமியைத் தாக்கினார்.

தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தற்போது ஜெயலட்சுமி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜெயலட்சுமியின் கணவர் தாமோதரன் மணவாள நகர் காவல் துறையில் புகார் கொடுத்ததின் பேரில் மணவாள நகர் காவல் துறையினர் ஞானசேகர், திமுக ஒன்றிய கவுன்சிலர் திராவிட பக்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பெண் காவலரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details