சென்னை:ராயபுரத்தில் உள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்திலிருந்து வாடகை காரை ஓட்டுநர் மெய்ஞானம் என்பவர் எடுத்துக்கொண்டு பயணிகளுடன் ஆந்திர மாநிலம் தடா நோக்கிசென்று கொண்டிருந்தார்.
மாதவரம் ரவுண்டானவை கடந்து செல்லும் போது கார்பழுதடைந்தது போல இருந்ததால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி இஞ்சின் முன்பக்கத்தை திறக்க முற்பட்ட போது தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து காரில்இருந்த பயணிகள் மூவர் கீழே இறங்கி, ஓட்டுநர் என 4 பேரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நண்பகல் உச்சி வெயிலில் கடும் அனல் காற்றுவீசதொடங்கியுள்ள நிலையில்கார்முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.