தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூக்கி எறிந்த தொழிற்சாலை: கண்ணீர் மல்க நிற்கும் 200 குடும்பங்கள்! - திருவள்ளூர்

திருவள்ளூர்: உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை பணியிலிருந்து நீக்கியதால், அவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து வேலையை உறுதி செய்ய வழிவகை செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தூக்கி எறிந்த தொழிற்சாலை: கண்ணீரோடு நிற்கும் 200 குடும்பங்கள்!

By

Published : May 9, 2019, 7:34 AM IST

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஹெச்.எம்.எஃப்.சி.எல். எனப்படும் கார் உதிரி பாகம் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகப் பணியாளர்கள், தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களாக வேலை செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில், பெருமளவு பங்குகளை ஹெச்.எம்.எஃப்.சி.எல். நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிட்டதால், அங்கு பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களாக உள்ள அலுவலக ஊழியர்களை வெளியேற முதல் கட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் தொடர்ந்து 6 நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். தொழிலாளர்கள் வீட்டிற்கு வராமல் தொழிற்சாலையிலேயே இருப்பதால், அவர்களது குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை நேரில் சந்தித்து மீண்டும் பணியில் அமர்த்துமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

கண்ணீரோடு நிற்கும் குடும்பங்கள்

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details