திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்ற கார் ஓட்டுநர் கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை - கார் ஓட்டுநர் கைது!
திருவள்ளூர்: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
வினோத்குமார்
வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொன்னேரி மகளிர் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநர் வினோத்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.