தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு - கவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் : பெரவல்லூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

road accident
road accident

By

Published : Jan 19, 2020, 12:59 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூரில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பழ வியாபாரிகளான இரண்டு பெண் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து கவரைப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

இந்நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன், சேகர் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:சாய்ந்துவிழும் நிலையில் மின்கம்பங்கள் - அச்சத்தில் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details