திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கருமனூர் கண்டிகை பகுதியில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்த தொழிலாளி குமரேசன் இன்று (ஜன. 05) காலை தேர்வாய் சிப்காட் தொழிற்சாலையில் சென்ட்ரிங் கட்டுமான ஒப்பந்தம் எடுப்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்துள்ளார்.
கார் மீது நெல் அறுவடை இயந்திரம் மோதி விபத்து - car accident
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே கார் மீது நெல் அறுவடை இயந்திரம் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர் உயிர் தப்பினார்.
அப்போது தண்டலம் அடுத்து கருமனூர் கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மோதியதில், கார் முழுவதும் நொறுங்கியது. அறுவடை இயந்திர ஓட்டுனர் தப்பி ஒடியதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி வழியே வந்தவர்கள் காரில் பயணித்த குமரேசனை காப்பாற்றியதால் அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதையும் படிங்க:கடற்கரை படகில் 1 டன் விரலி மஞ்சள் பதுக்கல் - காவல் துறை தீவிர விசாரணை