திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சாலையில், ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் அந்த வழியாகவந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் செல்ஃபோன்களைப் பறித்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரின் செல்ஃபோனை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர், பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து அவர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர், அந்த இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சோளிங்கரைச் சேர்ந்த விக்னேஷ், கூடலூரைச் சேர்ந்த சுஜித், ஷாம் சுந்தர் ஆகியோர்தான் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர்கள் அனைவரும் கஞ்சா பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.