திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை பூக்கடை மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருவள்ளூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 5 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தத் தகவலின்பேரில் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் காந்திநகர் ஆட்டந்தாங்கல் பொன்மணி தெருவில் உள்ள விஜய் (22) என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதில், 5 கிலோ எடை கொண்ட பத்து பாக்கெட் கஞ்சாவை பறிமுதல்செய்து விஜய்யை கைதுசெய்த காவல் துறையினர் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜய்யிடம் விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி செங்குன்றம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.