குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை பல இடங்களிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவருகிறன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தி, 2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நேரத்தில், எஸ்டிபிஐ கட்சி சார்பில் இஸ்லாமியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.