திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர், ஊத்துக்கோட்டை வணிகர் சங்கம் இணைந்து சில நாள்களுக்கு முன்பு தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் தீநுண்மிப் பரவுதலைத் தடுக்கும்விதமாக அனைத்துக் கடைகளும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் 2 மணி முதல் அனைத்து கடைகளும் கட்டாயம் அடைக்க வேண்டும் என அனைத்து கடைக்காரர்களும் ஒன்றிணைந்து அறிவித்து இன்று (ஜூன் 16) அதனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.