தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே அத்திப்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன், தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு
Brother and sister death

By

Published : Jan 24, 2021, 7:42 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு பாலமேடு ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காட்டுப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த செப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். அவரது மகன் தருண்(17), கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மகள் தேவி(14), அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் பாலமேடு ஏரியில் இறந்து கிடந்தனர்.

இதையறிந்த அருகில் இருந்தவர்கள், பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கும், மீஞ்சூர் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் பொன்னேரி தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையிலான தீயணைப்பு துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் பொதுச்சொத்து, அனைவருக்கும் சொந்தம்- எஸ்ஏ சந்திரசேகர்

ABOUT THE AUTHOR

...view details