திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (நவ.05) கனமழை காரணமாக பேரம்பாக்கத்தில் இருந்து மணவூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ள பாகசாலை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன் காரணமாக தரைப்பாலத்தில் மீது மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. மேலும் கடம்பத்தூரில் இருந்து மணவூர் செல்லும் கிராமத்திலுள்ள குப்பம் கண்டிகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த தரைப் பாலமும் துண்டிக்கப்பட்டது.
இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளித்தும், செல்பி எடுத்து வருகின்றனர்.