தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்: போக்குவரத்து கண்காணிப்பாளருக்கு சிறை - திருவள்ளூர்

திருவள்ளூர்: மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

thiruvallur
thiruvallur

By

Published : Aug 17, 2021, 8:49 AM IST

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள ரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் துளசிராமன். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு தனது மினிபஸ் உரிமத்தை புதுப்பிக்க திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு இருந்த வட்டாரப் போக்குவரத்து கண்காணிப்பாளர் சென்னை முகப்பேரை சேர்ந்த விஜயகுமார் (வயது 53) என்பவர் மினிபஸ் உரிமத்தை புதுப்பிக்க ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத அவர் இதுகுறித்து காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து லஞ்சப் பணத்தை வாங்க முயன்றபோது கண்காணிப்பாளர் விஜயகுமாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதில் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக 4 வருடம் கடுங்காவல் தண்டனையும், லஞ்சத்தை பெற்றதற்கு 4 வருடம் கடுங்காவல் தண்டனையும், இரண்டு குற்றத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் என 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details