திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் அடுத்த பொம்மாச்சி குளத்தில் வசித்து வருபவர் சந்திரா ரெட்டி மகன் மனோகர். இவர் நேற்று (டிசம்பர் 10) மாலை உறவினரது இல்ல திருமண விழாவிற்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: கொள்ளையர்களை தீவரமாக தேடிவரும் போலீஸ் - வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே மனோகர் என்பவர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இன்று (டிசம்பர் 11) மதியம் ஒரு மணி அளிவில் வீட்டிற்கு திரும்பிய மனோகர் அவரது குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு தெரியவந்தது. உடனே இதுகுறித்து பாதிரிவேடு காவல்துறையினருக்கு மனோகர் தகவலளித்தார். இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.