திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் புறநகர் ரயிலில், சீருடை அணிந்த பள்ளி மாணவி ஒருவர் ஓடி வந்து ஏறி தமது காலை நடைமேடையில் தேய்த்தபடியே சாகசத்தில் ஈடுபட்டார்.
அவருடன் பள்ளி சீருடை அணிந்த மாணவர் ஒருவரும் பயணித்து இதே போல ஓடும் ரயிலில் காலை நடைமேடையில் தேய்த்தபடியே பயணிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.