கொசஸ்தலை ஆற்றில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில், கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக 40 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதிலுள்ள பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு வந்து சேதப்படுத்தி, அதிலிருந்த மின் மோட்டாரையும் திருடிச் சென்றுள்ளனர்.
குடிநீர் குழாய்கள், மின் மோட்டார்கள் திருட்டு; தொடரும் சமூகவிரோதிகளின் அட்டகாசம்..!
திருவள்ளுர்: கொசஸ்தலை ஆற்றில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் கட்டப்பட்ட கூட்டுக்குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, மின் மோட்டார்களை திருடிச் சென்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாய்கள், மின் மோட்டார்கள் திருட்டு; தொடரும் சமூகவிரோதிகளின் அட்டகாசம்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பார்வையிட வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், காவல் கண்காணிப்பாளர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்று மதிப்பிட்டனர்.
இதுகுறித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், ’ஆட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் வண்ணம் சமூக விரோதிகள் செயல்படுகின்றனர். இந்த 17 ஆழ்துளைக் கிணறுகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.