கரோனா பேரிடர் காலம் என்பதால் வழக்கமான ரத்த தானம் முகாம் தற்போது நடைபெறுவதில்லை. மக்கள் ரத்த தானம் செய்வதில் அச்சப்படுகின்றனர். இதனால் அரசு ரத்த வங்கியில் இருப்பு குறைந்துள்ளது.
பேரிடர் காலத்திலும் ரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முகாம் - திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்: கரோனா பேரிடர் காலத்திலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் இன்று நடைபெற்றது.
இதைச் சரிசெய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் ரத்ததான முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் நகரக் கிளை, மணவாளநகர் கிளை சார்பில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து திருவள்ளூரில் 14ஆவது ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சாகுல் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் சதக்கத்துல்லாஹ் இப்ராஹிம், அஜாஸ், மன்சூர், சலீம், திருவள்ளூர், மணவாளநகர் நிர்வாகிகள் முகம்மது அலி, சம்சுதீன், ஷபி, இப்ராஹிம், ஜாபர் அலி, ஜாஹீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.