தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாயில் கருப்பு ரிப்பன் கட்டி நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம்! - Child abuse protest

திருவள்ளூர்: ஆவடி அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வாயில் கருப்பு ரிப்பன் கட்டி நடைபெற்ற திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்
black ribbon protest

By

Published : Dec 4, 2019, 2:05 PM IST

Updated : Dec 4, 2019, 2:14 PM IST

திருவள்ளூர் அருகே ஆவடி திருமுல்லைவாயிலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மீனாட்சிசுந்தரம் தனது தம்பி மகள் அவரது வீட்டிற்கு விளையாட வந்தப் போது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றார்.

அதன் பின்னர் சிறுமியின் உடலை தூக்கி சென்று தண்ணீர் பக்கெட்டில் திணித்துவிட்டு, தலைகீழாக தவறி விழுந்து குழந்தை இறந்ததாக நாடகம் ஆடினார். இந்த கொலைக்கு மீனாட்சிசுந்தரத்தின் மனைவியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் திருமுல்லைவாயில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வழக்கு விசாரணை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதில் மீனாட்சிசுந்தரம், ராஜம்மாள் தம்பதியினர் கடந்த வாரம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் பிணை வழங்கியது. இந்த நிலையில் நேற்று மீனாட்சிசுந்தரம் தனது மனைவி ராஜம்மாள் உடன் மகிளா நீதிமன்றம் நீதிபதி பரணிதரன் முன்பு ஆஜராகி இருந்தனர்.

வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி ஆர்ப்பாட்டம்

இதனிடையே நான்கு வயது சிறுமியை உறவுமுறையை பொருட்படுத்தாமல் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து நாடகமாடி உள்ளதால் பிணையை ரத்து செய்யக் கோரியும் மீண்டும் சிறையில் அடைக்க வலியுறுத்தி அதுமட்டுமில்லாமல் வழக்கு விரைந்து முடிக்கவும் தன்னார்வ அமைப்புகள் பதாகைகளை ஏந்தி திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கவனத்தை ஈர்க்கும் விதமாக வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி, கையில் பதாகைகளுடன் தங்களது எதிர்ப்பு தெரிவித்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ’’உடனடியாக இந்த வழக்கை முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றம் ஆவண செய்ய வேண்டும்’’ எனவும் கோரிக்கை வைத்தனர்.

பேட்டி: கனிமொழி - ஆவடி

இதையும் படிக்க: அழியும் நிலையில் உள்ள அரியவகை மகுடம் சூடிய பட்டாம்பூச்சி!

Last Updated : Dec 4, 2019, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details