தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணியில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை... ஆறு மாவட்டங்களிலிருந்து 1500 போலீஸ் குவிப்பு! - bjp vettivel yathirai

திருத்தணி: தடையை மீறி வெற்றிவேல் யாத்திரை செய்ய பாஜகவினர் திருத்தணி வருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு மாவட்டங்களிலிருந்து சுமார் 1500 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணி
திருத்தணி

By

Published : Nov 6, 2020, 1:11 PM IST

திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மலையடிவாரத்திலிருந்து தமிழ்நாடு பாஜகவினர் வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக முடிவு செய்திருந்தனர்.இதற்கு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, காவல் துறை அனுமதி தர முடியாது என்று கூறிவிட்டனர்.

இருப்பினும், திருத்தணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் சரகம் டி.ஐ.ஜி . சாமுண்டீஸ்வரி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடர் கண்காணிப்பில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1500 காவல் துறை அலுவலர்கள் திருத்தணியில் முருகன் கோயில் மலை அடிவாரம், திருத்தணி நுழைவுவாயில் முன்பும், பழைய சென்னை சாலை திருத்தணியில் பிரதான நுழைவாயில்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், திருத்தணி முருகன் கோயில் மலைக்கு பக்தர்கள் செல்வதற்கு நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெற்றிவேல் யாத்திரைக்காக பாஜகவினர் யாரும் மலைக்கோயிலுக்கு மேலே சென்றுவிடக் கூடாது என்ற காரணத்திற்காக எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த திடீர் தடையின் காரணமாக முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் காவல் துறையினரிமும், கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி, திருத்தணியில் தங்கும் விடுதிகள் மற்றும் கல்யாண மண்டபங்கள் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இதையும் மீறி பாஜகவினர் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் அல்லது சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வதற்காக தமிழ்நாடு அரசு சுமார் 20 பேருந்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தணியில் முக்கிய பகுதிகளில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details