தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்: பாஜக ஓபிசி அணி மாநில தலைவர் - தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

திருவள்ளூர்: கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக ஓபிசி அணி மாநில தலைவர் லோகநாதன் கூறியுள்ளார்.

பாஜக
பாஜக

By

Published : Oct 21, 2020, 9:31 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூரில் இன்று (அக்டோபர் 21) மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஓபிசி அணி மாநில செயலாளர் துரை, தனசேகர், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஓபிசி அணி மாநில தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தாமரை மலர்வது நிச்சயம். தற்போது மத்தியில் ஆட்சி செய்து வரும் நமது பாரதப் பிரதமர் மோடி பல்வேறு சீரிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

அந்த திட்டங்களை கட்சி நிர்வாகிகளான நாம் மக்களிடையே கொண்டு சென்று சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற நிர்வாகிகள் அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details