தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரம் - மிஸ்டுகால் மூலம் பாஜக உறுப்பினர் சேர்க்கை

திருவள்ளூர்: ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் மிஸ்டுகால் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

bjp

By

Published : Jul 8, 2019, 7:55 AM IST

நாடு முழுவதும் மிஸ்டு கால் மூலமாக பாஜக உறுப்பினர் சேர்க்கை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பொத்தூர் ஊராட்சியில் பாஜகவினர் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக உறுப்பினர் சேர்க்கை

இந்த உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். இதில் வர்த்தகப் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் ஜெயக்குமார், பொத்தூர் ஊராட்சித் தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் யுகாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் உள்ளவர்களை உறுப்பினர்களாக சேர்க்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details