திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் ஊராட்சியில் கே.எம். சுரேஷ் என்பவரது ஏற்பாட்டில் பல இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இன்று (ஆகஸ்ட் 5) அடிக்கல் நாட்டப்பட்டது. இதையொட்டி கும்மிடிப்பூண்டியில் உள்ள ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அயோத்தி ராமர் கோயிலுக்கு திருவள்ளூரில் சிறப்பு பூஜை - BJP members prayers
திருவள்ளூர்: அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி திருவள்ளூர் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
BJP members special Pooja for ayodhya Ramar Temple
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் எஸ். ராஜா, வே. சரவணன், மாநில அரசு தொடர்புத்துறை எம். பாஸ்கர் ஆகியோர் பூஜையில் கலந்துகொண்டு ராமர் கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி வழிபட்டனர்.