கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கமலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
கமல் மீது பாஜக வழக்கறிஞர்கள் எஸ்.பி.யிடம் புகார் - மக்கள் நீதி மய்யம் கட்சி
திருவள்ளூர்: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பளாரிடம் பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
file pic
இந்நிலையில், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் அணியின் திருவள்ளூர் மாவட்டசெயலாளர் பி.ஐசக் தலைமையில், கண்ணன், நாகரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.