திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடந்து வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு புகார் வந்தது.
இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது - thiruvallur district news
திருவள்ளூர்: இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் அம்மையார்குப்பம் பகுதியில் அடையளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இவர் திருத்தணியில் உள்ள அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினி அலெக்சாண்டர் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இவர் திருத்தணியில் உள்ள பல பகுதிகளில் இருந்து 12 இருசக்கர வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமின்றி வாகனங்களை பறிமுதல் செய்தனர்.