தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதிய விபத்தில் இருவர் பலி! - two died

திருவள்ளூர்: செங்குன்றத்தில் இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்குன்றத்தில் சாலை விபத்து

By

Published : Mar 28, 2019, 12:57 PM IST

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் சந்திப்பு பகுதியில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

செங்குன்றத்தில் நடந்த சாலை விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், லாரி கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியிருப்பதும், இதில் ஆவடி அடுத்த பஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் ஆவடியை சேர்ந்த சந்திரபாபு ஆகிய இருவர் உயிரிழந்திருப்பதும், சுஜித் என்பவர் காயமடைந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சாலை விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ABOUT THE AUTHOR

...view details