திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!
திருவள்ளூர்: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
Bharani deepam mounted in Thiruthani murugan temple
மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.