திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கே தற்காலிக ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரு அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியுள்ளது. அருகில் கழிவு நீர் தொட்டியும் திறந்திருந்ததால் நச்சுக் காற்று உருவாகியுள்ளது. இதைக் கவனிக்காமல் வேலை செய்து வந்த 4 பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.