தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் திபுதிபுவென புகுந்த 150 பேர்: வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்து அராஜகம்! - வாக்குப்பெட்டியை எரித்த அடையாளம் தெரியாத நபர்கள்

திருவள்ளூர்: பப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பெட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

வாக்குப் பெட்டி தீ வைத்து எரிப்பு
வாக்குப் பெட்டி தீ வைத்து எரிப்பு

By

Published : Dec 27, 2019, 5:24 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பப்பரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 150-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வாக்குச்சீட்டில் முத்திரை போடுவது தவறாக உள்ளது எனக் கூறி திடீரென்று வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி புகுந்தனர்.

பின்னர், அங்கிருந்த அலுவலர்களை ஒரு அறையில் பூட்டிவிட்டு, வாக்குப்பெட்டியிலிருந்து வாக்குச் சீட்டுகளை கீழே கொட்டி அதை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

திடீரென நடந்த இச்சம்பவத்தால் அங்கிருந்த பாதுகாப்பிலிருந்த சில காவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

வாக்குப் பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட வாக்குச்சாவடி

இது குறித்து, கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கரடுமுரடான சாலை... வாக்குப்பதிவு பெட்டி சுமந்துசெல்லும் அவலம்: தேர்தலுக்குப் பிறகேனும் தீர்த்துவைக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details