பகுஜன் சமாஜ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்! - நீட் தேர்வு ரத்து செய்ய கோரிக்கை
திருவள்ளூர்: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் எம்.பிரேம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெய்வீர் செல்வம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும், உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் மணிஷா பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததைக் கண்டித்தும் கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மாநில பொதுச் செயலாளர் மைக்கேல் தாஸ், மாநில செயலாளர் பொன் கிருஷ்ணன், உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.