தமிழ்நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் சி. நாயுடு சாலையில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், டிஎஸ்பி கங்காதரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், ரோட்டரி கிளப் நிர்வாகி குமரன் ஆகியோர் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்து, ரோஜா மலர் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.