மத்திய அரசின் சார்பில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கவும் கர்ப்பிணிகளின் உடல்நலத்தை மேம்படுத்தவும் 'போஷன் அபியான்' எனப்படும் தேசிய ஊட்டச்சத்து குழுமம் சிறப்புத் திட்டத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
ஊட்டச்சத்து குறைபாடு குறித்து திருவள்ளூரில் விழிப்புணர்வுப் பேரணி! - Thiruvallur District Collector Maheswari Ravikumar participated
திருவள்ளூர்: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த போது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி திருத்தணி நெடுஞ்சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சமூகநலத் துறை அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.