கரோனா காலத்தில் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் காஞ்சி சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் காவல் துறை சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு - Awareness campaign on behalf of the police department
திருவள்ளூர்: வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காவல் துறை சார்பாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி ஆகியோர் மேற்பார்வையில் ஊத்துக்கோட்டை துணை ஆய்வாளர் ராக்கி ராஜ்குமார், ஊத்துக்கோட்டை மேற்கு கால்வாய் தரை பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது துணை ஆய்வாளர் ராக்கி கூறுகையில், ”வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். பக்கத்து வீடுகளில் விட்டுச் செல்லக்கூடாது. தெரியாத நபர்கள் வந்தால் அவர்களின் வீட்டின் உள்ளே சேர்க்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:வாகனத்திலிருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த போக்குவரத்துக் காவலர்கள்