தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்கொடுமையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு முகாம் - பாலியல் வன்கொடுமைகள்

திருவள்ளூர்: பாலியல் வன்கொடுமையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

sexual harassment
sexual harassment

By

Published : Sep 19, 2020, 2:04 AM IST

திருவள்ளூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஏடிஎஸ்பி மீனாட்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டிஎஸ்பி துரைபாண்டியன், பெண் காவல் ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பெண்களுக்கு பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவர்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரையாற்றினார்.

மேலும் அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய முறையில் புகார் அளித்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஏடிஎஸ்பி மீனாட்சி கூறினார்.

இதைத்தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரம், அவசர உதவி இலவச எண்களையும் ஏடிஎஸ்பி மீனாட்சி, டிஎஸ்பி துரைபாண்டியன் ஆகியோர் அங்கிருந்த பெண்களுக்கு வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details