கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இளைஞர்களும் வெளியே சுற்றித் திரிகின்றனர்.
இதனால், பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் கிராமத்தில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் போன்றவை தெளித்தும் நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.