தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரில் மிதந்து செஸ் விளையாடி விழிப்புணர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தண்ணீரில் மிதந்து செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தண்ணீரில் மிதக்கும் செஸ் விளையாடி விழிப்புணர்வு
தண்ணீரில் மிதக்கும் செஸ் விளையாடி விழிப்புணர்வு

By

Published : Jul 23, 2022, 7:54 PM IST

திருவள்ளூர்: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் நீச்சல் குளத்தில் மிதந்துகொண்டு விளையாடும் செஸ் விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், துவக்கி வைத்தார்.

தண்ணீரில் மிதக்கும் செஸ் விளையாடி விழிப்புணர்வு

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு செஸ் விளையாடினர். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் வருகை

ABOUT THE AUTHOR

...view details