ஆவடி: மிட்டனமல்லி, ராகவா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (55). ஆவடி, சி.டி.எச் சாலையில் உள்ள கனரா வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.
பின்னர் பைக்கில் பெட்ரோல் டேங்க் கவரில் பணத்தை வைத்து கொண்டு புறப்பட்ட போது,அங்கு வந்த நான்கு மர்ம நபர்களில் ஒருவன் கீழே பத்து ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பியுள்ளான்.
ரூ. 75,000 கொள்ளை - வங்கியில் பணம் எடுத்து திரும்பியபோது மர்ம நபர்கள் கைவரிசை மகாலிங்கம் பைக்கை நிறுத்திவிட்டு கீழே கிடந்த பணத்தை எடுத்த போது, டேங்க் கவரில் இருந்த 75 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம் நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுதொடர்பான சிசிடிவில காட்சி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : 3 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு விழா காணும் மதுரை பெரியார் பேருந்து நிலையம்