தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை: மின்சாதன கடைகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள் - ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதன உதிரிபாகம் கொள்ளை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்த இரண்டு மின்சாதன உதிரிபாகம் விற்பனைக் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள், உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதன உதிரிபாகம் கொள்ளை

By

Published : Nov 6, 2019, 9:49 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் செல்லா ராம். இவருக்குச் சொந்தமான மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் மின் கம்பிகள் கொள்ளை அடித்துக்கொண்டு அருகிலுள்ள மற்றொரு கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ஒலிபெருக்கி, மின்கம்பிகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


கொள்ளைச் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர்கள் அளித்த புகாரின்பேரில் தகவலறிந்துவந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவினைக் கொண்டு கொள்ளையடித்துச் சென்றவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதன உதிரிபாகம் கொள்ளை

மேலும், தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாதன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளைக் குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உர மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாராட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details