திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இன்று (நவம்பர் 9) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு தொடங்கிய ரயில்வே மேம்பாலப் பணிகள் 6 வருடங்களாக பூர்த்தி செய்யபடமால் இருக்கிறது. மேம்பாலப்பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்தை சீர்செய்ய வேண்டியும், சென்னையிலிருந்து அரக்கோணம் மற்றும் திருத்தணி வரை செல்லும் புறநகர் ரயிலை அதிகளவில் இயக்க வேண்டும் என்றும், கடம்பத்தூர் வழியாக செல்லும் அரசுப் பேருந்துகளை உடனடியாக இயக்கிட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ரயில் பயணிகள் சங்கம்
திருவள்ளூர்: கடம்பத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், புறநகர் ரயிலை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Attention
அதே போல் கடம்பத்தூர் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும், கடம்பத்தூர் முதல் திருப்பாச்சூர் வரை அதிகளவில் வேகத்தடைகள் அதிகளவில் இருப்பதால் அவசரத்திற்கு செல்வோர், அவசர ஊர்த்தியில் செல்லும் போது சிரமமாக இருப்பதாகவும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவத்தனர்.