திருவள்ளூர் மாவட்டம் சூரவாரிகண்டிகை கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. அங்கு வாடிக்கையாளர்கள் ஒருவர் பணம் எடுப்பதற்காக நேற்று காலை சென்றபோது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர்.
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - போலீசார் விசாரணை - theft
திருவள்ளூர்: சூரவாரிகண்டிகை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரம்
பணத்தைக் கொள்ளையடிக்க வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கண்காணிப்பு கேமரா மீது ஸ்ப்ரே அடித்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியதாக காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.