தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி: காவல் துறை விசாரணை - ATM theft

திருவள்ளூர்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

atm-machine-theft-issue
atm-machine-theft-issue

By

Published : Oct 31, 2020, 10:46 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்ததாக அந்த மையத்தை பராமரித்து வரும் அஸ்வின் என்பவர் புகாரளித்தார்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

இந்தப் புகாரின் பேரில் செங்குன்றம் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கொண்டு ஏடிஎம் மையத்தை உடைத்து திருட முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:மகன் தற்கொலை வழக்கு: காவல் துறை மிரட்டுவதாக தாய் புகார்

ABOUT THE AUTHOR

...view details