ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனையிட்டபோது நான்கு பைகளில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் நகிரி பகுதியைச் சேர்ந்த லோவராஜ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.