திருவள்ளூரை அடுத்த மேல்மனம் முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் அவரது தம்பி வெங்கட்ராமனும் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தர்மன், ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளி வந்த இவர்கள் நீதிமன்றம் உத்தரவின்படி, தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துயிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வெள்ளவேடு காவல்நிலையத்தில் அவர்கள் ஏழு பேரும் கையெழுத்திட்டு வெளியே வரும்போது, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளனர். இதில் தருமன் என்பவர் படுகாயம் அடைந்தார். மற்ற ஆறு நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வெடிகுண்டு சத்தம் கேட்டு அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.