தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2,928 வெளிமாநிலத் தொழிலாளர்கள் 2 ரயில்களில் அனுப்பிவைப்பு! - thiruvallur district news

திருவள்ளூர்: ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், பிகார் உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 928 பேர் இரண்டு ரயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

at thiruvallur 2928 migrant workers sent back to their home
வெளிமாநிலத் தொழிலாளர்கள் 2928 பேர் ரயில் மூலம் அனுப்பிவைப்பு

By

Published : May 23, 2020, 10:02 AM IST

திருவள்ளூரில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், பிகார் உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்நத் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால், அவர்கள் அனைவரையும் ரயில் மூலமாக அனுப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்தது. மேலும் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, மாவட்டம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஆர்.கே. பேட்டை, திருத்தணி வட்டாரப் பகுதி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், அம்பத்தூர், வில்லிவாக்கம், காக்களூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

அவ்வாறு மீட்கப்பட்ட 2 ஆயிரத்து 928 பேரை திருவள்ளூர் ரயில் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் அனைத்தும் வழங்கப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்த பிறகு, இரண்டு ரயில்களில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:கரூரில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 604 தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு

ABOUT THE AUTHOR

...view details